வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற பிரேரணையொன்று கிழக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போது, மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் இப்பிரரேணை முன்வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற அரசாங்கம், அரச அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட அனைவரும் நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட இந்த பிரரேணை, அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.