6/08/2012

| |

இளம் ஜோடி தற்கொலை நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஊடக்களிலும் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் இளம் ஜோடி தற்கொலை. மட்டக்களப்பு மாவட்டத்தின் வயல் நிறைந்த பசுமை சோலை வவுணதீவு பிரதேசம் அங்கிருந்து ஆயித்திய மலைக்கு செல்லும் பாதையில் முள்ளாமுனை கிராமம் அமைந்துள்ளது அங்குள்ள ஒரு வயல் வாடியிலே இந்த இளம் ஜோடிகள் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடையை சேர்ந்த அழகதுரை மேகலா (22வயது) எனவும் மற்றவர் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளை 38ஆம் கொலணியை சேர்ந்த அரசரெட்னம் இளங்கோ (34வயது) இவர்களின் சடல்கள் இன்று (07.06.2012) அடக்கம் செய்யப்பட்டன.
இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம். சடலம் கிடப்பதாக சொல்லப்பட்ட முள்ளாமுனை கிராமத்திற்கு எமது செய்தியாளர்கள் சென்றதுடன் இவர்களின் தற்கொலைக்கான காரணத்தையும் அறிய முற்பட்டது.
நடந்தவை என்ன?பெற்றோர்களோ சிந்தியுங்கள்.....
அழகரெத்தினம் இளங்கோ 38 ம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் குடும்பம் தற்போது களுதாவளையில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்கள். திக்கோடையைச் சேர்ந்தவர் அழகுதுரை மேகலா. இவர் இளங்கோவின் வீட்டில் களுதாவளையில் இளங்கோவின் வீட்டில் தங்கி படித்து வந்திருக்கின்றார். அப்போது இளங்கோவிற்கும் மேகலாவிற்கும் காதல் ஏற்பட்டிருக்கின்றது. இவர்களின் காதல் எவராலும் பிரித்து விட முடியாத அளவிற்கு மிக நெருக்கமான காதலாக இருந்தும் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் இவர்களின் காதல் பிரிக்கப்பட்டிருக்கின்றது. காதல் பிரிக்கப்பட்டது என்பதனைவிட இவர்கள் இருவரையும் பிரித்து விட்டனர். ஆனாலும் அவர்களின் காதல் தொடர்ந்தது.
அவ்வேளையில் மேகலாவிற்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். ஆனாலும் திருமணத்தின் பின்னரும் இளங்கோ மேகலா இருவரது காதலும் தொடர்ந்திருக்கின்றது. அடிக்கடி தாம் இருவரும் சந்தித்து இருக்கின்றனர். கால ஓட்டத்தில் மேகலாவின் கணவன் வெளிநாடு சென்றிருக்கின்றார். கணவன் வெளிநாடு சென்ற பின்னர் மேகலாவின் வீட்டுக்கு அடிக்கடி இளங்கோ சென்றுவர ஆரம்பித்து விட்டார்.
வெளிநாட்டில் இருந்த மேகலாவின் கணவன் இதனை அறிந்துவிட்டார். மேகலா தன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னர் இளங்கோவை காதலித்த விடயம் தற்போதும் காதல் தொடர்வது, அடிக்கடி மேகலாவின் வீட்டிற்கு இளங்கோ சென்று வருகின்ற விடயம் அனைத்தையும் மேகலாவின் கணவன் அறிந்து கொண்டார்.
இதனால் மேகலாவிற்கும் கணவருக்கும் குடும்பதகராறு அடிக்கடி ஆரம்பிக்க ஆரம்பித்து சட்ட ரீதியாக இருவரும் பிரிகின்ற நிலைக்கு சென்றிருக்கின்றனர். இதனை அறிந்த இளங்கோ மேகலாவை தன்னுடன் வரும்படி அழைத்திருக்கின்றார். அதன் பின்னர் மேகலா இளங்கோவின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றார்.
இது இவ்வாறிருக்க சிங்கப்பூரில் வசிக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் களகனகளனயன மூலம் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருக்கின்றது. சிங்கப்பூரில் வசிக்கும் இளங்கோவின் புதிய காதலி மாமாங்கப் பிள்ளையார் ஆலய திருவிளாவிற்கு சி்கப்பூரிலிருந்து வந்திருக்கின்றார். அப்போது இளங்கோவும் சிங்கப்பூரிலிருந்து வந்த காதலியும் பதிவுத் திருமணம் செய்திருக்கி்ன்றனர். பதிவுத் திருமணத்தின் பின்னர் சிங்கப்பூர் காதலி சிங்கப்பூர் போய் விட்டார். விரைவில் சிங்கப்பூர் போய் விடுவேன் என்று இளங்கோ தனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றார்.
காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. இளங்கோ மேகலாவுடன் சந்தோசமாக வாழ்ந்துவரும் வேளை கடந்த 7 நாட்களுக்கு முன்னர் சி்கப்பூரிலிருந்து காதலி மட்டக்களப்புக்கு வந்து இளங்கோவின் வீட்டிற்கு வந்திருக்கின்றார். ஓரிரு நாட்கள் இளங்கோவின் வீட்டில் தங்கியிருக்கிறார். இளங்கோவின் வீட்டவர்களுக்கு சிங்கப்பூர் பெண்ணை இளங்கோ திருமணம் முடிப்பது விருப்பம். ஆனாலும் இளங்கோவால் மேகலாவை மறக்கவோ மேகலாவை விட்டுப் பிரியவோ முடியவில்லை.
வீட்டில் பிரச்சினையாகிவிட்டது. சிங்கப்பூர் பெண் இளங்கோ வீட்டுக்கு வந்திருப்பதனை மேகலா அறிந்து விட்டார். இதனால் மேகலாவும் குழப்பமடைந்துவிட்டார். தான் மேகலாவை விட்டு பிரிய முடியாமல் போய்விட்டது. மேகலா இளங்கோவின் குடும்பத்தவர்களிடம் சொல்லி இருக்கின்றார் நான் வாழ்வதோ சாவதோ இளங்கோவோடுதான். எங்களைப் பிரிக்க நினைத்தால் நாம் இறந்து விடுவோம் என்று சொல்லி இருக்கின்றார். இளங்கோவும் தனது வீட்டில் தான் சாகப்போவதாக சோல்லி இருக்கின்றார்.
இளங்கோவும் மேகலாவும் சாவதாக பல திட்டங்களோடு முடிவெடுத்திருக்கின்றனர். இளங்கோ தனது பெயரில் வங்கியில் இருந்த பணத்தினை தனது தம்பியின் பெயரில் மாற்றியிருப்பதாக அறிய முடிகி்றது.
அது மாத்திரமல்ல தான் எடுப்பது முட்டாள்தனமான முடிவு என்பதனையும் இளங்கோ அறியாமல் இல்லை. தனக்கு தானே மரண அறிவித்தல் ஒன்றினையும் மூன்று பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்திருக்கின்றார். அக்கடிதத்தை தனது மரணச் சடங்கின்போது ஒலி பெருக்கியில் எல்லோருக்கும் வாசித்து காட்டும்படியும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அக் கடிதத்தில் தான் வாழ்ந்த 34 வருடகாலத்தில் சாதி மத இன பேதங்களை மறந்து தன்னோடு பழகிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்திருப்பதோடு தான் எடுக்கும் இந்த முடிவு முட்டாள்தனமான ஒரு முடிவாகும் என்றும் இவ்வாறான முடிவுகளை எவரும் எடுக்க வேண்டாம் என்றும் தான் எடுக்கும் இந்த முடிவு முட்டாள் தனமான முடிவு என்பதை தான் அறிந்திருந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இந்த முடிவை எடுப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இளங்கோவிற்கும் மேகலாவிற்கும் காதல் ஏற்பட்டபோது பெற்றோர் அவர்களின் காதலிற்கு எதிரிகளாக இல்லாமல் இருந்திருந்தால் இளங்கோ மேகலா இருவரும் சந்தோசமாக வாழ்ந்திருப்பார்கள். இன்று இளம் வயதில் இரு உயிர்களையும் பறி கொடுக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. பெற்றோர்களோ சிந்தியுங்கள்.....
இளங்கோ தனது கையால் எழுதிய கடிதத்தினை வெளியிட இருந்தோம் அவரது உறவினர்கள் அவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதனால் நாம் அவற்றை வெளியிடவில்லை.
இளங்கோ ,மேகலா இருவரினதும் ஆத்மா சாந்தியடைய நாமும் பிராத்திக்கின்றோம்.