சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, கர்நாடகப் போலிசாரால் தேடப்பட்டுவரும் நிலையில், கர்நாடக நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்
கர்நாடகத்தில் பிடதி ஆசிரமம் ஒன்றில் ஜூன் 8ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் சிலருக்கும் , நித்யானந்தா ஆதரவாளர்கள் சிலருக்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து, இரு தரப்பினரும் போலிசாரிடம் பரஸ்பரம் புகார்களைப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக , கர்நாடகப் போலிசார் நித்யானந்தா மீது சில வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து, நித்யானந்தா, இன்று , புதன்கிழமை , ராம் நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இவரை நாளை வியாழக்கிழமை வரை போலிஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன