இந்திய மற்றும் ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உலகின் மிக அதிவேக பிரமோஸ் ஏவுகணையினை வருகிற 2017ம் ஆண்டிற்குள் சோதனை செய்திட திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணை ஒலியை போன்று 5 முதல் 7 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் பெற்றது என்று தலைமை செயல் அதிகாரி சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.
கடந்த வருடம் ஒலியை போன்று 5 மடங்கு விரைவாக செல்லும் ஏவுகணையை அமெரிக்கா சோதனை செய்தது.
தற்போது, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் தயாரிப்பான பிரமோஸ் அந்த சாதனையை நெருங்கும் என கூறப்படுகிறது.
தரையிலிருந்து வான்வெளியிலிருந்து மற்றும் கடலிலிருந்து என 3 வழிகளில் செலுத்தும் வகையில் தயாராகும் இந்த ஏவுகணை உலகின் எந்த இலக்கையும் ஒரு மணி நேரத்தில் சென்று தாக்க கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தது.
மேலும் இதனை இந்தியா மற்றும் ரஷ்யா தவிர வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.