தங்களைச் தூற்றும் வகையில் வீரகேசரி பத்திரிகையில்(01.06.2012) பிரசுரமான செய்தி முற்றிலும் திரிவுபடுத்தப்பட்ட ஓர் செய்தியே ஆகும்
தற்போது பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை நாளையிலிருந்து மூன்று நாட்கள் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெறவுள்ளது. இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் இன்று (04.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்கள்.
அதாவது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே 2400 மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றார்கள் இவர்களில் பெரும்பாலானர்வர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்குவது என்பதில் சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும். அவ்வாறு நியமனம் வழங்கும் போது ஆண்டை அடிப்படையாக கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள். அதாவது 2009 ஆண்டுக்கு முன்னர் உள்ள பட்தாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டிருந்தார்கள்.
இதற்கு பதியளித்த முதலமைச்சர் சந்திரகாந்தன் உண்மையில் குறித்த நியமனங்கள் தங்களது வேண்டுகோளுக்கமைய செயற்படும் வண்ணம் இடம் பெறும் அதிலும் குறிப்பாக ஆண்டை அடிப்படையாக கொண்டுதான் நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் தாங்களுடன் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கலந்துரையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பட்டதாரிகள் ஒன்றியம் சார்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபன் குறிப்பிடுகையில், அண்மையில் பட்டதாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் ஓர் முறுகல் நிலையயை தோற்றுவிக்கும் வகையில் செய்திகள் வெளியாகி இருந்தன. உண்மையில் பட்டதாரிகள் ஒன்றியம் என்ற அடிப்படையில் அவ்வாறான நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களை படித்த சமூகமாகிய நாங்கள் தங்களுக்கு பிரயோகித்ததே இல்லை, இதனை ஊடகங்கள்தான் திரிவுபடுத்தி இருக்கின்றன. கிழக்கின் முதல் மகன் என்ற வகையில் தங்களுக்குரிய கௌரவத்தையும் மரியாதையும் வழங்க வேண்டிய பொறுப்பு கல்வி சமூகமாகிய எங்களைச் சார்ந்தது. அவ்வாறிருக்கையில் மிகவும் கேவலமான சொற்பதங்கiளால் தங்களைச் தூற்றும் வகையில் வீரகேசரி பத்திரிகையில்(01.06.2012) பிரசுரமான செய்தி முற்றிலும் திரிவுபடுத்தப்பட்ட ஓர் செய்தியே ஆகும். அதற்காக இந்த தருணத்தில் பட்டதாரிகள் ஒன்றியம் ஆகிய நாங்கள் எங்களது மனக்கவலையை தெரிவித்து கொள்கின்றோம். அத்தோடு இனிவருகின்ற காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படாத வண்ணம் தாங்கள் நடந்து கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஒன்றியத்தின் செயலாளர் மகேந்திரன் , இணைப்பாளர் திவாகரன் மற்றும் பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.