துறைநீலாவணை மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் P.இலட்சுமனன் தலைமையில் நாகேந்திரன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரசாந்தன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி பிள்ளைநாயகம், கோட்டக்கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் மக்கள், புத்திஜீவிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்