6/28/2012

| |

கிழக்கு மாகாண சபை இன்று நல்லிரவுடன் கலைக்கப்படும் - முதலமைச்சர் சந்திரகாந்தன்

கிழக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சி காலம் இன்று(27.06.2012) நல்லிரவுடன் முடிவுக்கு வருகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். அந்த வகையில் இன்று நல்லிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைக்கபட்டு உடனடியாக தேர்தல் நடாத்தபட இருப்பததாகவும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் கலைப்பு தொடர்பில் தாம் உரிய ஆவணங்களில் கைச்சாத்திட்டு ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனோடு இணைந்த வகையில் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளும் கலைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகள் கலைப்பு

* வேட்புமனுத் திகதி ஒருவாரத்துள் அறிவிப்பு
* 114 ஆசனங்களுக்கு செப்டெம்பரில் தேர்தல்
மூன்று மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோபூர்வ வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளி யிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாகாண சபைகள் கலைக் கப்படுவது தொடர்பில் மூன்று மாகா ணங்களினதும் முதலமைச்சர்கள் அந் தந்த மாகாண ஆளுனர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறி வித்துள்ளதையடுத்து உரிய வர்த்தமானி அறிவித்தல்களில் சம்பந்தப்பட்ட ஆளுனர்கள் கையொ ப்பமிட்டுள்ளனர்.
வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அந்த மாகாண சபைகளைக் கலைப்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவின. எனினும் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைகள் சட்டங்களுக்கிணங்க மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒருவாரங்கள் நிறைவடைந்ததும் தேர்தல் கள் ஆணையாளர் அடுத்த தேர்தலுக்கான வேட்பு மனு திகதியை அறிவிப்பார். இதற்கிணங்க ஒரு வார காலத்திற்குள் இத்தீர்மானம் அறிவிக்கப்படும்.
எனினும் இதற்கான திகதி இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லையென தேர்தல் செயலகம் நேற்று அறிவித்தது. இதே வேளை பெரும்பாலும் செப்டம்பர் முதற் பகுதியில் கலைக்கப்பட்ட மேற்படி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுமென தெரிய வருகிறது.
போனஸ் ஆசனங்கள் உட்பட மூன்று மாகாண சபைகளுக்கும் 114 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதன்படி கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்களும் வட மத்திய மாகாண சபைக்கு 33 உறுப்பினர்களும் சப்ரகமுவ மாகாண சபைக்கு 44 உறுப் பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கலைக்கப்பட்ட மாகாண சபைகளில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 20 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியில் 15 பேரும் மக்கள் விடுதலை முன்னணியில் ஒருவரும் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணியில் ஒருவருமென மொத்தம்37 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
வட மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 20 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியில் 12 பேரும் ஜே. வி.பி. யில் ஒருவருமென மொத்தம் 33 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 25 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் 17 பேர், மக்கள் விடுதலை முன்னணியில் 2 பேர், என மொத்தம் 44 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டி ருந்தனர். நேற்றைய தினம் மாகாண சபைகள் மூன்றும் கலைக்கப்பட்டதை யடுத்து வரும் தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் உடனடியாகவே தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதை அறிய முடிந்தது.