6/26/2012

| |

விவசாயப் பெருமக்களுடன் முதல்வர் சந்திரகாந்தன் முக்கிய சந்திப்பு


கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தடானை, பள்ளத்துசேனை, பேரில்லாவெளி ஆகிய பிரதேச விவசாயப் பெருமக்களுடன் கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முக்கிய சந்திப்பு ஒன்றை தடானை குமாரர் ஆலய முன்றலில் ஏற்படுத்தி இருந்தார்.
குறித்த பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்த கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது. விவசாய அமைப்புக்களின் தலைவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சியின் உப தலைவர் யோகவேள், பொருளாளர் தேவராஜா, முன்னாள் பொருளாhளர் அருண், சித்தாண்டி பிரதேச இணைப்hளர் தியாகராஜா, செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் மற்றும் கிராம சேவையாளர், வட்டவிதானைமார் உட்பட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டர்கள்.
குறிப்பாக இப் பிரதேச விவசாயிகள் எதிர் நோக்ககின்ற முக்கிய பிரச்சினைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டவரபட்டு, அதற்கான உடனடித் தீர்வகளும் மேற்கொள்ளப்பட்டன. அதாவது முள்ளிப் பொத்தானை கண்ட விவசாயிகளுக்கான உரமானியம் இதவைரை காலமும் வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான உடனடி நடவடிக்iகியினை முதலமைச்சர் மேற்கொண்டார்.
அடுத்து விக்டர் அணைக்கட்டானது தங்களது வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கான பொருத்தப்பாடாக அமையவில்லை. இதனை நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து அதனை முதல்வர் பார்வையிட்டு எதிர்வரும் போக காலத்தில் குறித்த அணைக்கட்டை நிரந்தரமாக்கி அதனூடாக விவசாயக் காணிகளுக்கு நீர்ப்பாய்ச்சவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவிதர்தார்.
மேலும் மிகவும் காட்டுப் பிரதேசங்களாக இப் பிரதேசங்கள் காணப்படுவதனால் வரட்சி காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்காக நிரந்தர விவசாயக் கிணறுகள் மற்றும் மின்சாரம் விவசாய வீதி அபிவிருத்தி ஆலய புணரமைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்வரும் ஆண்டில் அதனையும் பூர்த்தி செய்து தருவதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.