கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ்; மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாங்கேணி கிராமத்தில் அமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை நிலையம் நேற்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஐந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் மகப்பேற்று சிகிச்சை நிலையம் அமையப்பெற்றது.
வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திஸாநாயக்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், வாகரை பிரதேச சபை தவிசாளர் கண்ணப்பன் கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.