முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் புணரமைக்கபட்டு வருகின்ற முனைக்காடு பொது விளையாட்டு மைதானத்தின் வேலைகளை முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக இன்று(16.06.2012) ஆரம்பித்து வைத்தார். சுமார் 10 இல்சம் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புணரமைக்கபட்டுவருகின்ற விளையாட்டு மைதானத்திலே முனைக்காடு இராம கிருஸ்ணா விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடன் மதல்வர் கலந்துரையாடுவதனைப் படத்தில் காணலாம். இந் நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் பேரின்பராஜாவும் இணைந்து கொண்டார்.