6/17/2012

| |

சேவா அமைப்பின் தொழில் பயிற்சி நிலையத்தை முதல்வர் பார்வையிட்டார்.

கிழக்கு மாகாணத்திலே கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான தொழில் முயற்சிக்கான பயிற்சிகளை இந்திய நாட்டின் நிதி உதவியுடன் கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து இந்திய சேவா அமைப்பானது மேற்கொண்டு வருகின்றது. அதாவது கிழக்கு மாகாணத்திலே யுத்தம் மற்றும் வன்செயல் காரணமாக கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான விசேட திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்த்திலே இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனொரு பயிற்கூடம் வாழைச்சேனை கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இங்கே ஆடைகள் தைத்தல் மற்றும் அலங்காரமிடுதல், உணவுபதனிடுதல் மற்றும் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்தல் எனப் பல்வேறு பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப் பயிற்சி நிலையத்தினை இன்று(13.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனும் கலந்து கொண்டார்.குறிதத் திட்டமானது முதலமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையிலே கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.