கிழக்கு மாகாணத்தில் கல்வி பயிலும் 61 ஆயிரம் பாலர் பாடசாலை மாணவர்களின் நலன்களைக் கவனிக்கவென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் வழிகாட்டலில் முதன்முறையாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் பணியகம் இன்று காலை மட்டக்களப்பு நகரில் திறந்து வைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பணியகத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் திறந்துவைத்தார்.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தலைவர் பொன். செல்வநாயகம் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்கலாநிதி கே.விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 61,500 பாலர் பாடசாலை மாணவர்களினதும் 1,800 பாலர் பாடசாலைகளினதும் 3,500 ஆசிரியர்களினதும் நலன்களை இவ்அலுவலகம் கவனிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.