6/15/2012

| |

கல்வி ஒத்துழைப்பு மேம்பாடு; இலங்கை - கியூபா ஒப்பந்தம் ஜனாதிபதியின் விஜயத்தின் போது கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கியூபா விஜயத்தின் போது கியூபாவுடன் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பதில் வெளிவிவகார அமைச்சர் டி. யு. குணசேகர முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்திற்கும் கியூபா சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான ராவுல் ரோவா கார்சியா நிறுவனத் திற்குமிடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 ஆம் 16 ஆம் திகதிகளில் கியூபாவுக்கு விஜயம் செய்கிறார். இதன்போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.
இதேவேளை, ஹங்கேரியாவுக்கும் இலங்கைக்குமிடையில் அரசியல் பொருளாதார, வர்த்தக, நீதி, விவசாயம், கலாசாரம், தொழில் நுட்பம், விஞ்ஞான ஒத்துழைப்பு தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் வருடாந்தம் மீளாய்வு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
ஓமானில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் இலங்கையர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களது சேமநலங் களை கவனிக்கவும் என ஓமானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.