6/04/2012

| |

அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள பாடசாலை அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று 02.06.2012 வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கல்குடா கல்வி வலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார்.
அவர் குறிப்பிடுகையில் எதிர் வருகின்ற ஆண்டில் இக் கல்வி வலயமானது க்பொ.த.சா.தரப் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றில் அதிகூடிய பெறுபேறுகளை பெறவேண்டும்.அதற்காhக அதிகாரிகள் பாடசாலைகளின் தலைவர்களாக இருக்கின்ற அதிபர்கள் கடுமையான உழைப்பினை வழங்கி எமது சமூகத்தின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்க வேண்டும். இதற்காக என்னாலான அனைத்து உதவிகளையும் நான் வழங்குவேன் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதிக் கல்வி பணிப்பாளர் ரவி, கோட்டக் கல்வி அதிகாரிகளான குணலிங்கம், சுகுமாரன் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் இது போன்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலை முதலமைச்சர் சந்திரகாந்தன் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்ப ஆகிய வலயங்களில் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.