தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப் பிரதேசத்திற்கான கிளைக்காரியாலயம் கோயில் போரதீவில் இன்று (11.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை மற்றும் எதிர்கால திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசத்திலும் தனது கிளைக் காரியாலயங்களை நிறுவி அதனூடாக மக்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்ளைகள், திட்டங்கள் விரி;வாக விளக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மட்டக்களப்பு , அம்பாரை மற்றும் திருகோணமலையிலும் கட்சியின் கிளைக்காரியாலயங்னள் திறந்து வைப்படவுள்ளதாக கட்சியின் செயலாளர் தெரிவித்hர். இந் நிகழ்வில் கட்சியின் செயலாளர் பூ பிரசாந்தன், பிரதேச அமைப்பாளரும் தவிசாளருமான சிறிதரன், கட்சியின் பொருளாhளர் தேவராஜா மற்றும் கோயில் போரதீவு பிரதேசத்தின் கட்சி தொணடர்கள் உட்பட கிராம மக்களும் கலந்து கொண்டார்கள்.