6/11/2012

| |

எழுச்சி பெறும் திருமலை மாவட்டத்தின் எல்லை கிராமங்கள்

திருகோணமலை மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மூதூர் செயலாளர் பிரிவிலுள்ள நீனாக்கேணி மற்றும் நல்லூர் கிராமங்கள் தற்போது எழுச்சி கண்டு வருகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது விசேட நிதி ஒதுக்கீட்டில் அதாவது சமமான பிராந்திய அபிவிருத்தி எனும் ஒன்பது கிராமங்கள் அபிவிருத்தி செயற்றிட்டத்தின்; கீழ் மேற்படி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக இன்று (09.06.2012) நிர்மாணிக்கப்படவுள்ள திஃமூஃ நீனாக்கேணி மலைமுந்தல் மலைமகள் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் ஆர். செல்லச்சாமி தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் , மூதூர் வலயக் கலிவி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, முதலமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன் ,திருமலை மாவட்டத்தின் கட்டிடத்திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் கு.நளினகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். குறித்த கிராமத்தின் அபிவிருத்திக்காக சுமார் 100இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி ,ஆலய பணரமைப்பு ,வீட்டுவசதிகள் மற்றும் சுயதொழில் மேம்பாட்டிற்கான உதவிகள் எனப் பல திட்டங்கள் இதனுள் உள்ளடக்கபபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே போன்று திருமலை மாவட்டத்தில் மொறவௌ
பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ் கிராமமான சாந்தி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.