இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசால் முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பங்கு பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும், அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ரனில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்களுக்கு அரசு இணங்கினால் தமது கட்சி இந்தக் குழுவில் இடம்பெறலாம் என்று தெரிவித்திருந்தார் எனவும் யோகராஜன் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அரச தரப்பு இதுவரை இது தொடர்பில் நேரடியான ஒரு பதிலை வழங்கவில்லை என்றும், அப்படியான ஒரு பதிலை அரசாங்கம் வழங்கும் வரை, தெரிவிக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபெறுவது குறித்த முடிவை எடுக்க முடியாது என்று கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தமிழோசையிடம் தெரிவித்தார்.