6/05/2012

| |

த.ம.வி.பு கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் கிளைக் காரியாலயம் களுதாவளையில் திறந்து வைக்கபபட்டது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் கிளைக்காரியாலயம் களுதாவளையில் இன்று (03.06.2012) மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைப்பாளர் எஸ்.ஆர்.மணிவண்ணன் அவர்களினால் திறந்து வைக்கபட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாளர் ஆ.தேவராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் சந்திரகுமார் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.