6/04/2012

| |

கிழக்கு முதலமைச்சரினால் பொலிஸ் நிலையங்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் கணணிகள், போட்டோ கொப்பி இயந்திரங்கள் மற்றும் பெக்ஸ் இயந்திரங்கள் ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சிரேஷட பிரதி பொலிஸ் மா அதிபர் அபேசிறி குணவர்த்தன, முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் இரண்டு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் 15 கணணிகள் மற்றும் 15பிரின்ரர்களும் 06போட்டோ கொப்பி இயந்திரங்கள் மற்றும் 15 பெக்ஸ் இயந்திரங்கள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன.
இந்த உபகரணங்களை கிழக்கு மாகாண சிரேஷ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முதலமைச்சர் சந்திரகாந்தன் கையளித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 23 பொலிஸ் நிலையங்களுக்கு இந்த உபரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.