6/18/2012

| |

விவசாயம் தொடர்பிலான 6 நூல்கள் வெளியீடு


கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் விவசாயத்தில் பேண்தகு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆறு நூல்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிட்டுவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு, மகாஜன கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பீடாதிபதி கலாநிதி சோமசுந்தரம் சுதர்சன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார், கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் க.மகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்லைக்கழகத்தின் பீடாதிபதிகளான பேராசிரியர் மா.செல்வராஜா, கலாநிதி திருமதி மு.வினோவா, கலாநிதி க.எ.கருணாகரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஆர்.ருசாந்தன், கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் ஜெ.ஜெயராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளும் அவற்றுக்கான வளமாக்கியை பெறும்வழிகள் குறித்து ஆராயப்பட்டு தீர்வுகள் அடங்கியதாக இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன் சூழல் பாதுகாப்பு, காலநிலையும் விவசாயமும் சேதன வளமாக்கிகள், தாவர பீடைநாசினிகள், மனித ஆரோக்கியம் ஆகியவற்றையும் இந்த இதழ்கள் தாங்கியுள்ளன.