ஒரு மாத காலத்துக்குள் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அபிவிருத்தி, மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், 20 அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 300 பேர் நேரடி கள பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட விரிவாக்கல் செயற்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் ஒரு மாத காலத்திற்குள் கிழக்கு மாகாண சபை கலைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை தேர்தல் விடயத்தில் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருப்பதை போன்று தமிழ் மக்க ளும் விழிப்பாக இருக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபையை கலை த்து விரைவாக கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டு மென ஜனாதிபதி உறுதியாக முடிவெடுத்துள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் நிச்சயமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பே ஆட்சியமைக்கும்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ் லிம் காங்கிரஸ் அனைத்து கட்சிக ளையும் சேர்த்து போட்டியிட வேண்டுமென நாங்கள் தீர்மானித்து ள்ளோம்.
இந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் விடயத்தில் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருப் பதை போன்று தமிழ் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக என்றுமில்லாத வாறு பாரிய அபிவிருத்தி மக்கள் நலன் சார் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
அந்த வகையில் நாளை 15ம் திகதி 20 அரசாங்க அமைச்சர்கள், அர சாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பணியாளர்களுமாக மொத்தம் 300 பேர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
மட்டக்களப்புக்கு வருகை தரும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறு ப்பினர்கள் மட்டக்களப்பு மற்றும் கல்குடா தொகுதிகளில் நாளை 16ம் திகதியும் மறுநாள் 17ம் திகதியும் நேரடியாக கிராமங்களுக்கு கால் நடையாக சென்று மக்களின் பிரச்சி னைகள் கடந்த கால செயற்பாடுகள் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர் பாக கேட்டறிந்து கொள்ளவுள்ளனர்.
இந்த வேலைத்திட்டங்கள் தொடர் பான ஒரு ஆய்வை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலை மையில் இவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைப்பா ளராக விளையாட்டுத்துறை அமை ச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எமது கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு இணைப்பாளர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத் திய குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ் வொருவரையும் நாங்கள் மாவட்ட இணைப்பாளர்களாக நியமித்திருக் கின்றோம்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மகிந்தானந்த அளுத் கமகே இணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவரின் தலைமையில் மாவட்டத் தில் பல்வேறு பகுதிக ளுக்கும் அமை ச்சர்கள் பாராளு மன்ற உறுப்பினர்கள் சென்று வேலைத்திட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.
சனிக்கிழமை காலை மட்டக்க ளப்பு மாவட்டத்தில் இவர்கள் 500 பாடசாலை மாணவர்களுக்கு துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைக்க வுள்ளனர். ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி இவ்வாண்டு கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திகளுக்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு வெபர் மைதானம் தேசிய மைதான மாக புனரமைக்கப்படவுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அந்த வேலைகளும் ஓரிரு மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியாக விரிவாக்கல் செய் யும் திட்டம் தொடர்ந்து எமது கட்சி யினால் முன்னெடுக்கப்பட்டு வரு கின்றது எனவும் அவர் மேலும் தெரி வித்தார். இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் பிரிவு அமைப்பாளர் ருத்மலர் ஞான பாஸ்கரன், பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.