6/30/2012
| |
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரேக்கம்
| |
இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஒலியின் வேகத்தை மிஞ்சும் பிரமோஸ் ஏவுகணை
| |
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள்
செய்வதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி தேர்தல் இடம்பெறலாம் என பரவலாக
பேசப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை
தெரிவித்து வருகின்றன.
தாங்கள் ஆடசியை அமைப்போம், தங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவி
கிடைக்கும் என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் சொல்லிக்
கொண்டிருக்கின்றனர். யார் முதலமைச்சர் என்பதனை மக்கள்
தீர்மானிப்பார்கள். யார் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள்,
சந்தர்ப்பவாத அரசியலை நடாத்துபவர்கள் யார் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு
உணர்ந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ
பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாக மீண்டும் கிழக்கு மக்களை ஏமாற்றலாம் என்று
நினைப்பார்களானால் அது அவர்களின் முட்டாள்தனமாகும். இன்று கிழக்கு மக்கள்
உண்மைகளையும் , யதார்த்தங்களையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கிலே ஜனநாயகக் கதவுகள்
திறக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில். நடைபெற இருக்கின்ற மாகாணசபைத்
தேர்தலிலே போட்டியிடுவதற்கு பலரும் முண்டியடித்துக்
கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நடைபெற இருக்கின்ற
கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே களமிறங்க இருக்கின்றனர். இவர்கள் இத்
தேர்தலில் களமிறங்குவதன் மூலமாக சாதிக்கப் போவது என்ன? இவர்கள் இத்
தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கொள்கைகள் என்ன என்பதனையே நான் அடிக்கடி
கேட்டுக்கொண்டு வருகின்றேன். இதுவரை யாரும் பதில் சொன்னதாகத்
தெரியவில்லை. அடிக்கடி கொள்கைகள் மாற்றப்படுவதாகவே நான் உணர்கின்றேன்.
தமிழீழமே இறுதி மூச்சு, புலிகளே எமது ஏக பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு
இணைந்ததே எமது தாயகம் என்ற கொள்கைகளும் கோசங்களும் எங்கே போனது?
இன்று கிழக்கு மாகாணத்தில் தனித்த கிழக்கு மாகாணசபையில் போட்டியிட
தீர்மானித்திருக்கும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதனை
விரும்புகின்றனரா? தமது கொள்கைகளை கைவிட்டனரா? அப்படியானால் நீங்கள்
அரசியல் சுயலாபம் தேடுவதற்காகவா வீரவசனங்களைப் பேசி எமது மக்களை சூடேற்றி
போராட்டத்திற்கு அனுப்பி பலிக்கடாவாக்கினீர்கள். இன்று நீங்கள்
எடுத்திருக்கும் முடிவுகளை அன்று எடுத்திருந்தால் இத்தனை இலட்சக்கணக்கான
தமிழ் உறவுகளின் உயிர்களை பலி கொடுத்திருக்க வேண்டிய அவசியம்
இருந்திருக்காதே.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறும் கூட்டமைப்பினர்
இதுவரை தமிழர்களுக்காக என்ன செய்தனர்? தாயக மீட்பு போராட்டம் எனும்
போர்வையில் நீங்கள் அரங்கேற்றிய நாடகங்களில் எந்த ஒரு கூட்டமைப்பு
அரசியல்வாதியின் குடும்பம் பங்கெடுத்திருக்கின்றதா? எந்த கூட்டமைப்பு
அரசியல்வாதியாவது தலை நிமிர்ந்து சொல்லட்டும் பார்க்கலாம்.
அது போகட்டும் முள்ளிவாய்க்கால் படுகொலை என்று இன்று கொக்கரிக்கின்ற
கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற ஒறுப்பினராவது முள்ளிவாய்க்காலில் உக்கிர
மோதல் நடைபெற்றபோது வாய் திறந்தார்களா? யாராவது ஒருவர் குரல்
கொடுத்தாரா? சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் அறிக்கைவிடும் அறிக்கை
மன்னர்கள் அன்று மெளனம் சாதித்தது ஏன்?
தொடரும்.....
6/29/2012
| |
அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் முடிந்தவரையில் அபிவிருத்தியையும் செய்து எங்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளோம் - முன்னாள் முதலமைச்சர்
6/28/2012
| |
கிழக்கு மாகாண சபை இன்று நல்லிரவுடன் கலைக்கப்படும் - முதலமைச்சர் சந்திரகாந்தன்
கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகள் கலைப்பு
6/27/2012
| |
நீர்ப்பாசன குளம் மற்றும் அணைக்கட்டை நேரில் சென்று பார்வையிடும் கிழக்கு முதல்வர்
6/26/2012
| |
பாலர் பாடசாலை மாணவர்களின் நன்மைகருதி கிழக்கில் பாலர் கல்வி பணியகம் திறப்பு
| |
லிபிய முன்னாள் பிரதமர் துனீஷியாவிலிருந்து நாடுகடத்தல்
| |
த.ம.வி.புலிகள்; கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் சந்தி வெளியில்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் இன்று (24.06.2012) பிற்பகல் 4 மணிக்கு கோறளைப் பற்று பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான தா.உதயஜீவதாஸ் தலைமையில் இடம் பெற்றது. சந்தி வெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் , கொள்கை பரப்பு செயலாளர் ஆஸாத் மௌலானா பொருளாளர் தேவராஜா பிரதித்; தலைவர் யோகவேள் பிரதேச மக்கள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஞானமுத்து, நடராஜா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
| |
த.ம.வி.புலிகள் கட்சியின் கொள்கை விளக்கப் பிரச்சாரம்
இக் கூட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உப தலைவர் யோகவேள் , கொள்கை பரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். கொள்கை பரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா மற்றும் தலைவர் சந்திரகாந்தன் கட்சியின் கொள்கை மற்றும் எதிர் காலத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்கள்.
| |
விவசாயப் பெருமக்களுடன் முதல்வர் சந்திரகாந்தன் முக்கிய சந்திப்பு
குறித்த பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்த கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது. விவசாய அமைப்புக்களின் தலைவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சியின் உப தலைவர் யோகவேள், பொருளாளர் தேவராஜா, முன்னாள் பொருளாhளர் அருண், சித்தாண்டி பிரதேச இணைப்hளர் தியாகராஜா, செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் மற்றும் கிராம சேவையாளர், வட்டவிதானைமார் உட்பட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டர்கள்.
குறிப்பாக இப் பிரதேச விவசாயிகள் எதிர் நோக்ககின்ற முக்கிய பிரச்சினைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டவரபட்டு, அதற்கான உடனடித் தீர்வகளும் மேற்கொள்ளப்பட்டன. அதாவது முள்ளிப் பொத்தானை கண்ட விவசாயிகளுக்கான உரமானியம் இதவைரை காலமும் வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான உடனடி நடவடிக்iகியினை முதலமைச்சர் மேற்கொண்டார்.
அடுத்து விக்டர் அணைக்கட்டானது தங்களது வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கான பொருத்தப்பாடாக அமையவில்லை. இதனை நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து அதனை முதல்வர் பார்வையிட்டு எதிர்வரும் போக காலத்தில் குறித்த அணைக்கட்டை நிரந்தரமாக்கி அதனூடாக விவசாயக் காணிகளுக்கு நீர்ப்பாய்ச்சவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவிதர்தார்.
மேலும் மிகவும் காட்டுப் பிரதேசங்களாக இப் பிரதேசங்கள் காணப்படுவதனால் வரட்சி காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்காக நிரந்தர விவசாயக் கிணறுகள் மற்றும் மின்சாரம் விவசாய வீதி அபிவிருத்தி ஆலய புணரமைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்வரும் ஆண்டில் அதனையும் பூர்த்தி செய்து தருவதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
6/25/2012
| |
மாங்கேணியில் மகப்பேற்று சிகிச்சை நிலையம் திறப்பு
6/24/2012
| |
ஏ.ஜி.எம். ஸதக்கா: எழுத்தின் புன்னகை நூல் வெளியீட்டு விழா
| |
கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்
6/23/2012
| |
தமிழினிக்கு புனர்வாழ்வு'
6/22/2012
| |
ஆஸி. செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்துள்ளது
110 பேர் மீட்பு-மற்றவர்கள் நிலை என்ன?
| |
மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை விரைவில்! பரீட்சார்த்தம் பார்க்க மட்டு வாவியில் இன்று இறங்கிய சீபிளேன்
6/20/2012
| |
கிழக்கு மாகாண சபை கலைப்பு தொடர்பான இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு மீதான விவாதம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று
| |
நிந்தவூர் வைத்தியசாலைக்கு கிழக்கு முதல்வர் திடீர் விஜயம்
| |
இம்ரான் பிறீமியர் லீக் போட்டி இறுதி நாள் நிக்ழ்விற்கு பிரதம அதிதி. கிழக்கு மாகாண முதலமைச்சர்
இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்;களான வை.எல். சுலமாலெவ்வே எஸ்.எம்.ஐ.றியாஸ், கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆஸாத் மௌலானா ஒரேஞ் தேயிலை கம்பனியின் இயக்குணர் நஸார் மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் உடபட பலர் கலந்து கொண்டார்கள்.நிந்தவூர் இம்ரான் அணியே வெற்றி ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.
6/18/2012
| |
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா
| |
விவசாயம் தொடர்பிலான 6 நூல்கள் வெளியீடு
| |
ஈழத்து திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு சீமேந்து பக்கட் அன்பளிப்பு
| |
முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடடில் புணரமைக்கப்படும் முனைக்காடு பொது விளையாட்டு மைதானம்
6/17/2012
| |
பர்மாவின் துன்பங்களை உலகம் மறக்கவில்லை' - ஆங் சான் சூ சி
அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
''நோபல் பரிசுக் குழு சமாதானத்துக்கான பரிசை எனக்கு வழங்கியதன் மூலம், அடக்குமுறைக்கு உள்ளான, தனிமைப்படுத்தப்பட்ட பர்மாவும் உலகின் ஒரு பகுதி என்பதை அதன் மூலம் அங்கீகரித்திருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்ற கொள்கையை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆகவே என்னைப்பொறுத்தவரை, ஒரு நோபல் பரிசை பெறுவது என்பது, ஜனநாயகத்த்தின் மீதான மற்றும் மனித உரிமைகள் மீதான எனது கரிசனைகளை நாடுகளின் எல்லைகளைக் கடந்து விஸ்தரிப்பது என்று பொருளாகும். எனது இதயத்தில் இந்த நோபல் பரிசு ஒரு வாசலைத் திறந்திருக்கிறது'' என்றார் ஆங்சான் சூ சி.
| |