5/12/2012

| |

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு people Organization for Change (POC)

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் என பரவலாக தமிழ் ஊடகங்களில் பேசப்படுகின்ற இன்றைய நிலையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி இடுவதன் உண்மை நோக்கம் வெறுமனே கிழக்கு மாகாணத்தின் மீதும் கிழக்கு மக்கள் மீதும் இருக்கின்ற அக்கறை அல்ல. கிழக்கிலே இடம்பெறுகின்ற துரித அபிவிருத்தியினை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் உண்மை நோக்கம்.

பரவலாக அவர்கள் இப்போது மேடைகளில் பேசுகின்ற விடயம் பிள்ளையான் முதலமைச்சராக வரக்கூடாது என்பதாகும். இவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது கிழக்கு மக்களின் மீதும் கிழக்கின் மீதும் இருக்கின்ற அக்கறை இல்லை. கிழக்கில் பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருக்கக்கூடாது. என்பது மட்டுமே.

கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சராக இருப்பதனால் கூட்டமைப்பினர் கிழக்கு மக்களை ஏமாற்ற முடியாது. மறு பக்கத்தில் கிழக்கு மாகாண துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது கிழக்கை அபிவிருத்தி அடைய விடக்கூடாது எனும் யாழ்ப்பாண தலைமைகளின் எண்ணங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலுருவம் கொடுத்து வருகின்றனர். 

உண்மையாகவே கிழக்கில் மாகாணசபை தேர்தல் ஒன்று நடக்குமாக இருந்தால் கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டால் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சரை இழக்க நேரிடும். இது கூட்டமைப்பினருக்கு தெரியும். அதனையே கூட்டமைப்பினரும் விரும்புகின்றனர். தமிழ் முதலமைச்சரை பெற முடியாமல் போனால் கிழக்கின் அபிவிருத்தி தடைப்படும் கூட்டமைப்பினரின் நோக்கமும் அதுதான்.

அது ஒரு புறமிருக்க வடக்கு, கிழக்கு இணைப்பே கூட்டமைப்பின் கொள்கை ஆனால் தனியாக பிரிந்திருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது. அவர்களின் கொள்கைக்கு முரணானது இல்லையா? அல்லது கொள்கைகளை கைவிட்டு விட்டனரா? அல்லது தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனரா எனும் கேள்விகள் எழுகின்றன.

கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைக்கவும் முடியாது தமிழர்கள் எதிர்க் கட்சிக்கே செல்ல வேண்டும். அதனால் தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதும் கூட்டமைப்பினருக்கு தெரியும். இவை அனைத்தையும் அறிந்தும் கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சராக இருக்கக்கூடாது கிழக்கில் அபிவிருத்தி இடம்பெறக்கூடாது என்பதற்காக மாகாணசபை தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கும் கூட்டமைப்பின் செயற்பாட்டை நாம் வண்மையாகக் கண்டிப்பதோடு வடக்கு மேலாதிக்க தலைமைகளின் கிழக்கு மீதான மேலாதிக்க சிந்தனைகளுக்கு துணைபோகும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் 

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை