*மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (07.05.2012) மதுரங்கேணிக்குளம் பிரதேசத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் கோறளைப் பற்று பிரதேசசபைக்குட்பட்ட மதுரங்கேணிக்குளம் கிராமத்தில் 587 பயனாளிகள் பயன்பெறும் நோக்குடன் 29 மில்லியன் செலவில் இந்நீர் விநியோகத்திட்டமானது சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டுள்ளது
*கரடியனாறு பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (07.05.2012) கரடியனாறு பிரதேசத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக கடந்த பல தசாப்பதங்களாக எமது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஏனைய மாகாணங்களைவிட பின்த்கிய நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக இப் பிரதேசங்களின் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்பட்டதனால் இப்பிரதேச மக்கள் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு கிராமிய நீர்வழங்கல் வசதிகளை மேம்படுத்துவதற்காக கிழக்கு மாகாணசபையானது முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இத்திட்டமானது இலங்கை அரசாங்கத்திற்கும் JICA நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்படுகின்ற 764 மில்லியன் ஜென் உதவியும் 5மூ சமூக பங்களிப்பும் திட்டத்திற்காக உள்வாங்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண நீர்வழங்கல் திட்டத்தின் 2008 ம் ஆண்டின் சாத்திய வள ஆய்வின் அடிப்படையில் 28 உப திட்டங்கள் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளன.
இவற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பிரதான நீர்வழங்கல் திட்டமும் ஒரு குழாய்க்கிணறு அமைக்கும் திட்டமும் உள்வாங்கப்பட்டுள்ளது. குழாய்க்கிணறு அமைக்கும் திட்டத்தில் 06 குழாய்க் கிணறுகள் அமைக்கும் வேலையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டமானது தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுசரணை ஊடாக Ceywater Consultant (PVT LTD) நிறுவனத்தின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்களிற்கு குடிநீர் வசதியினை வழங்குவதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துதல் என்பதே இத் திட்டத்தின் இலக்கு ஆகும்.
இதனடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியனாறு கிராமத்தில் 2064 பயனாளிகள் பயன்பெறும் நோக்குடன் 68 மில்லியன் செலவில் இந்நீர் விநியோகத்திட்டமானது சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

*ஆலங்குளம் பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (07.05.2012) ஆலங்குளம் பிரதேசத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் கோறளைப் பற்று பிரதேசசபைக்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் 920 பயனாளிகள் பயன்பெறும் நோக்குடன் 39 மில்லியன் செலவில் இந்நீர் விநியோகத்திட்டமானது சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.