.மட்டகளப்பு மாவட்டம் எங்கும் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு தமிழரசுகட்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது தமிழ் அரசு கட்சியினரின் மாநாட்டு அழைப்பினை மக்கள் கண்டுகொள்ளவில்லை இதன் காரணமா க கொதிப்படைந்த சம்பந்தர் இதை இவ்வளவுபேரும்கொழும்பில் இருந்தே பேசியிருக்கலாம் என்று மட்டகளப்பு எம்பிமாரை பார்த்து கத்தினாராம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு இன்று மாலை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்தில் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானது. இன்று தமிழரசுக்கட்சியின் செயற்குழு, மற்றும் மத்திய குழுக்களின் கூட்டம் நடைபெற்றது.
நாளை காலை 9மணிக்கு கட்சியின் பொதுச்சபை கூடி புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளது. பொதுச்சபை கூட்டத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மாவட்ட தலைவர்கள், செயற்குழு ஆகியன தெரிவு செய்யப்பட உள்ளன. இக்கூட்டங்கள் மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்திலேயே நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலிருந்து பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர். கட்சியின் தலைவர், மற்றும் செயலாளர் பதவிகள் போட்டியின்றி சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் தெரிவு செய்யப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தேசிய மகாநாடு மட்டக்களப்பு ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்திலேயே நடைபெற உள்ளது