5/26/2012

| |

முஸ்லிம் காங்கிரஸ் அலுவகத்தீக்கிரை சம்பவம் ஜனநாயக அரசியலின்கழுத்து நெரிப்பு – ரீ.எல்.ஜவ்பர்கான்


முஸ்லிம் சமுகத்தின் அரசியல் முகவரியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய காத்தான்குடி பிரதேசத்திற்கான அலுவலகம் இன்று மாலை கட்சியின் தேசிய தலைவரினால் திறக்கப்படவிருந்த நிலையில் திட்டமிடப்பட்ட ரீதியில் தீவைத்து கொழுத்திய சம்பவமானது ஜனநாயக அரசியிலின் மற்றொரு கழுத்து நெரிப்புச்செயலாகும்.
இவ்வாறான அசிங்கத்தனங்களை அரங்கேற்றுபவர்களை மக்கள் அடையாளம் காணுதல் அவசியம் என்று  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸன் தேசிய செயற்குழு உறுப்பினரும் பிரதேச அமைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கவிச்சுடர்  ரீ.எல்.ஜவ்பர்கான் ஜே.பீ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
30 வருட கொடுமை நிறைந்த யுத்தம் ஓய்ந்து நீண்ட இடைவெளியின் பின்னர் சமாதன தென்றல் வீசும் இத்தருணத்தில் தாம் விரும்பிய அரசியலைச் செய்யவிடாது தடுத்து சர்வதிகார திணிப்பு அரசியலை நடாத்த முற்படுவது ஜனநாயத்திற்கு செய்யும் பெரும் துரோகமாகும்.
இத்தயை நடவடிக்கைகள் தொடருமானால் அரசியல் சுதந்திரமும் ஜனநாயக செயற்பாடுகளும் கைகட்டி வாய்மூடி ரசிக்க வேண்டிய நிலையே ஏற்படும். தயவுசெய்து விரும்பியவர்கள் விரும்பிய அரசியிலில் ஈடுபடும் ஜனநாயகம் பெற்றுத்தந்த சுதந்திரத்திற்கு தீமூட்டாதீர்கள் என்ற சிந்தனையை இதன் மூலம் விண்ணப்பமாகச்செய்கின்றேன்.
யா அல்லாஹ் சகலருடைய  ஆத்மாக்களையும் தூய்மைப்படுத்துவாயாக என அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.