தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வுகள் இவ்வருடம் மட்டக்களப்பில் சரித்திரத்திலேயே வரலாறு காணாத அளவிற்கு இடம்பெற்றது. இம் மேதின திகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் செங்கலடி இடம்பெற்றது.
பிற்பகல் மூன்று மணியளவில் தன்னாமுனையிலிருந்து ஆரம்பமான ஆரம்பமான மேதின ஊர்வலம் செங்கலடியை சென்றடைந்தது. இவ் ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மோட்டார் வண்டிகள் முச்சக்கரவண்டிகள் பார ஊர்த்திகள் உளவு இயந்திரங்கள் என்று நீண்ட வரிசையில் பவனி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் கிழக்கிலே எந்த ஒரு அரசியல் கட்சியாலும் மேதின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. பல தசாப்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கட்சிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லிக் கொள்கின்ற கட்சிகளும் இம் மேதினத்தில் சிறிய ஒரு நிகழ்வுகளைக்கூட செய்யவில்லை. தேர்தல் காலங்களில் வாக்குகளை பெறுவதற்காக தொழிலாளர்களை நாடி வருகின்ற அரசியல்வாதிகள் தொழிலாளர் தினத்தில் மறந்து விடுகின்றனர்.
ஆனாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்களே ஆகின்றபோதிலும். இம் மேதினத்தினை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். எத்தனையோ கட்சிகள் கிழக்கிலே மக்களின் வாக்குகளை பெற்று இவ்வாறான தினங்களில் அவர்களை மறந்து விடுவார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்குக்கென்று உருவாக்கப்பட்ட கிழக்கு மக்களுக்காகவும் எமது மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்கின்ற கட்சி என்பதனை இந்த மேதினத்தில் நிருபித்திருக்கின்றனர்.

மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் நடாத்துகின்ற கட்சிகள் கிழக்கு மக்களை ஒருபோதும் முன்னிலைப் படுத்தியதில்லை. இதற்கு உதாரணம் இந்த மேதினத்தினை குறிப்பிடலாம். வாக்குகளைப் பெறுவதற்காக வருகின்ற அரசியலவாதிகள் மக்களுக்காக இவ்வாறான செயற்பாடுகளை செய்ய முன்வராமைக்கான காரணங்கள் என்ன?
உண்மையில் அக்கட்சிகளில் கிழக்கிலே தலைமைத்துவங்கள் இல்லாமைதான் காரணமாகும். அக் கட்சிகள் கிழக்கினை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. அனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது இன்று கிழக்கு மக்களுக்காக குரல் கொடுக்கின்ற மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றனர். இதனை மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதன் வெளிப்பாடுதான் கிழக்கு மக்கள் தேசிய மாநாட்டின் பின்னர் இவ்வருடத்தில் இரண்டாவது முறையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்காக ஒன்று திரண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் சக்தியினை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்.