5/11/2012

| |

சுவாமி விபுலாநந்தரால் நிர்வகிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் இரு பிரபல பாடசாலைகளுக்கிடையிலான ‘தங்க அணிகளின் போர்’ என அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டி

தங்க அணிகளின் போர்’ என அழைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் பிரபல பாடசாலைகளான திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் ஆகியவற்றிற்கு இடையிலான மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
சுவாமி விபுலாநந்தரால் நிர்வகிக்கப்பட்ட கிழக்கின் இரு பெரும் பாடசாலைகளான மேற்படி பாடசாலைகளிடையே சிநேக பூர்வ உறவை பேணும் முகமாக இக் கிரிகெட் போட்டித் தொடர் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்றது.
கடந்த வருடம் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சிவானந்தா அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இப்போட்டி இடம்பெறவுள்ளது.