மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் முன் வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை க்கு பதிலளித்து ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. ஆற்றிய உரை.
கெளரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, எமது அன்புக்குரிய நண்பர் Senior Member மாவை சேனாதிராஜா அவர்கள் இச்சபையில் முன்வைத்துள்ள பிரேரணையின் ஆரம்பத்திலே, “சொல்லப்பட்ட ஆயுதப் போராட்டம் நடைபெற்ற பொழுது” எனக் குறிப்பிட்டார். அவர்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.
தாம் ஆயுதம் தூக்கி னார்கள் என்பதை ஒத்துக்கொண்டிருக் கின்றார்கள். அத்துடன் “ஆயிரக்கணக் கான தமிழர்களும் ஏனையவர்களும் வடக்குக், கிழக்கிலுள்ள தமது வதி விடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் ளார்கள்” எனக் குறிப்பிட்டார்.
“ஏனையவர்கள்” என்று யாரைக் குறிப்பிட்டீர்கள்? அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தவர்களா, கன்னடப் பிரதேசத்தவர்களா? ஏன் உங்களுக்கு “முஸ்லிம்கள்” எனக் குறிப்பிடுவதற் குக் கூச்சம்? என்று நான் கேட்க விரும்புகின்றேன். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து எழுபத்தை யாயிரம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள்.
75 ஆயிரம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இது தங்கள் தாயகம் என்றும் அதில் தாங்களே ஆட்சி நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினார்கள். எங்களுடைய முஸ்லிம்களும் அங்கிருந்தார்கள். மோசமான உடை அணிந்திருந்த அவர்கள் தங்களால் எடுத்துக் கொள் ளக்கூடிய உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.
இந்தக் கதை உங்களுக்கு நன்கு தெரியும். இது இவ்விதம் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதற்காக கண்டனத்தையோ அந்த மக்களுக்காக கவலையையோ தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் சுஸ்மா சுவராஜ் (இந்திய லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவி) இங்கு வந்திருந்தார். அவர் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முக்கிய தலைவர்களான சபை முதல்வர் கெளரவ நிமல் சிறிபால டி சில்வா உட்பட பலரையும் சந்தித்தார். சபைத் தலைவர் அவர்களே, நீங்களும் அங்கு இருந்தீர்கள்.
நான் இதனை அந்த அம்மாவுக்கு எடுத்து ரைத்தேன். 75 ஆயிரம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டியடிக் கப்பட்டார்கள். உங்களுடைய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடுகளில் ஒரு வீட்டையேனும் முஸ்லிம்களுக்கு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. இது நியாயம் தானா? இதுவா நீதி? இதுவா அவர்களின் நன்நெறிப் பண்பு?
கெளரவ சம்பந்தன் அவர்களே, நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவராக இருப்பதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் ஓர் சிரேஷ்ட அங்கத்தவர். நான் இதனை திருமதி சுஸ்மா சுவராஜ் முன்னிலை யில் தெரிவித்தேன். முஸ்லிம்கள் வட பகுதியில் இருந்து விரட்டி அடிக்கப் பட்ட போது ரி.என்.ஏ. தலைவரோ அவரது அணியைச் சேர்ந்த வேறு ஒருவருமோ கண்டனம் தெரிவிக்க வில்லை.
ஆனால் இன்று அவர்கள் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். எனவே, இந்திய அரசாங்கம் நிர்மாணிக்கும் வீடுகளில் ஓரளவு வீடுகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டு மென்று கேட்க விரும்புகிறேன். இதை விட வேறு வழியில்லை. இந்தியாவின் அயோத்தியாவில் உள்ள பப்ரி பள்ளி வாசலை நிர்மூலமாக்கிய போது அன்று கறுப்புக் கண்ணாடி மு. கருணாநிதி ஐயா அவர்கள் சும்மா இருந்தார்.
இப்பொழுது அவர் அவருடைய கண்ணுக்கு எட்டாத தூரத்திலுள்ள அவருடைய கறுப்புக் கண்ணாடியால் பார்க்க முடியாத தூரத்திலுள்ள தம்புள்ளைப் பள்ளிவாசல் பற்றிப் பேசுகின்றார்.
இது என்ன வெட்கக்கேடான விடயம்! காத்தான்குடியிலே (இடையீடு) நீங்கள் அமருங்கள்! கொஞ்சம் பொறுமையாக இருங்கள்! காத்தான்குடியிலுள்ள ஹுஸைன் பள்ளிவாசலில் முஸ்லிம் சகோதரர்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது ஐயா அவர்கள் தமிழ் நாட்டிலே என்ன செய்து கொண்டிருந் தார்? அவருக்கு நேரமிருக்கவில்லையா? நீங்கள் கருணாநிதி அவர்களை னீலீஜீலீnனீ பண்ணவா எழுந்து நிற்கின் aர்கள்? என்று கேட்க விரும்புகின் றேன். ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தானை மற்றும் பள்ளித்திடலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் யாரால் படுகொலை செய்யப்பட்டார்கள்? விடுதலைப் புலிகளால்தான் படுகொலை செய்யப்பட்டார்கள். (இடையீடு)
அவைத் தலைவர் அவர்களே, உங்களுக்கு திரு. சோ. எஸ். இராமசாமி என்பவரை தெரியுமா? இவர் வாராந்தம் வெளிவரும் ‘துக்ளக்’ என்ற தமிழ் சஞ்சிகையின் உறுப்பினராவார். இந்த பத்திரிகை ஆசிரியர் ராஜ்ய சபாவின் முன்னாள் உறுப்பினருமாவார். இவர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமாறு இங்குள்ள தமிழ் கட்சிகளும் உலகெங்கிலும் உள்ள தமிழ் கட்சிகளும் வேண்டுகோள் விடுக்கின்றன.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிaர்கள்” என்று ஒரு நிருபர் கேட்டார். இதற்கு சோ. இராமசாமி அளித்த பதிலை கேளுங்கள். “இந்த அமெரிக்க பிரேரணை இலங்கையை கண்டிக்கவில்லை என்பதை இந்த மக்கள் புரிந்து கொண்டார்களா என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.
இந்தப் பிரேரணையில் கற்றறிந்த பாடங்கள்மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்தது என்றும் இந்த ஆணைக்குழு தென்னாபிரிக்காவின் உண்மை அறியும் நல்லிணக்க ஆணைக்குழுவை போல் அமைந்திருந்தது என்றும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே அமெரிக்க பிரேரணை குறிப்பிட்டிருந்தது. இந்த அமெரிக்க பிரேரணை தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுள்ளது. இதனை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
அவரிடம் இன்னுமொரு கேள்வி கேட்கப்பட்டது. யுத்தக் குற்றம் புரிந்தவர்களை தண்டிப்பவர்களை என்ன செய்ய வேண்டுமென்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த இராம சாமி” இலங்கையில் யுத்தம் ஒன்று நடக்கவில்லை. இந்தியாவில் நக்சலைட்டுகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் யுத்தம் ஒன்று நடந்தது. இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் யுத்தம் நடந்தது”.
இவர் எந்தத் தருணத்தில் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார் என்று அவதானியுங்கள்.
திரு. இராமசாமியிடம் இன்னுமொரு கேள்வி கேட்கப்பட்டது. இந்த யுத்தத் தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட் டார்கள். அல்லது அதனை இலங்கையில் நடந்த சம்பவத்தை நீங்கள் எந்த விதத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.
அதற்கு பதிலளித்த துக்ளக் ஆசிரியர், பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினர் மனிதக் கேடயங்களாக பயன்படுத் தியதால் தான் இது நடந்தது. இது பற்றி எவரும் இன்று பேசுகிறார்கள் இல்லை. அதற்கு சோ. இராமசாமி ,அவர்களுக்கு பொதுமக்களை பயன்படுத்தலாம். சிறுவர்களையும், தற்கொலை குண்டுதாரிகளையும் மனித கேடயங்களாக பயன்படுத்தலாம். அதனால் இந்த நாட்டுக்கு என்ன ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது.
சரி. அவைத் தலைவர் அவர்களே!
திரு. சோ. இராமசாமியிடம் கேட்கப் பட்ட கடைசி கேள்வி இதுதான். தமிழ் தேசியத்துவம் சர்வதேச மயமாகிறதா என்று கேட்டார்கள். அதே கேள்வியை இன்று நான் ரி.என்.ஏ. தலைவர்களிடம் கேட்கிறேன். அதற்கு கிடைத்த பதில் இதுதான். இதைப்பற்றி சந்தேகப்படத் தேவை யில்லை. ரி.என்.ஏ. பல வருடங்களாக இதனையே செய்து வருகின்றது.
ஆயுதம் தூக்கிய போராளிகள் சட்ட விதிகளை பின்பற்றத் தேவையில்லை. ஆனால், ஒரு அரசாங்கம் எப்போதும் சர்வதேச சட்டத்தையும் யுத்த சட்டத்திருத்தங்களையும் மனதில் கொண்டு செயற்படுவது அவசியம். இது எவ்விதம் சாத்தியமாகும். இவ்விதம் நடந்தால் எந்தவொரு நாட்டு அரசாங்கத்தினாலும் பயங்கரவாதத்தை அடக்கிவிட முடியாது. திரு. சோ. இராமசாமி ஒரு சிறந்த சட்டத்தரணியும் ஒரு பத்திரிகை ஆசிரியருமாவார். எந்த வொரு நாட்டு அரசாங்கத்தினாலும் பயங்கரவாதத்தை அடக்கிவிட முடியாது. அந்த அரசாங்கத்திடம் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று கூறினால் அது சாத்தியமாகாது. இப்போதைய நிலைப்பாடு இதுதான்.
சமீபத்தில் நான் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 35வது சிரார்த்த தினத்தில் கலந்து கொண்டேன். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கலாநிதி சிறி பத்மநாதன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். அவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியராவார். இவர் சிரார்த்ததின உரையை ஆற்றினார்.
அவர் என்ன சொன்னார்? அவர் சொன்னார். முஸ்லிம்களின் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். அவர் இலங்கை தமிழரசுக் கட்சியை கட்டி எழுப்பிய இருவரின் பெயரை குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் சொல்லின் செல்வர் திரு.
ராஜதுரை ஆகும். அவர் முன்னாள் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும், இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராகவும் இருந்தார். கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த இன்னு மொரு சொல்லின் செல்வர் இருந்தார். அவர் செனட்டர் எஸ்.இசட்.எம். மசூர் மெளலானாவாகும். திரு. செல்வநாயகம் அவர்கள் முஸ்லிம்களுக்கு உத்தரவாதத்தை அளித்தார். நான் அவர் பேசுவதை செவிமடுத்துக் கொண்டிருந்தேன்.
திரு. சம்பந்தன் அவர்களே, நீங்களும் உத்தரவாதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சியை கட்டியெழுப்பிய கெளரவ இராஜதுரை அவர்கள் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் ஞாபகார்த்த நிகழ்வுக்கு சென்ற போது ரி.என்.ஏ.யைச் சேர்ந்த எவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அங்குதான் உங்களுக்கு வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடியும். வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் ஐக்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பை கட்டியெழுப்புங்கள்.
‘சுடர் ஒளி’ பத்திரிகையில் அநேக மாக எங்களுடைய செய்திகளைப் பிரசுரிக்கமாட்டார்கள். அதனைப் பற்றி கெளரவ உறுப்பினர் சரவணபவன் அவர்களிடத்திலும் அதனுடைய ஆசிரியரிடத்திலும் நான் முறையிட்டி ருக்கின்றேன். என்றாலும், இன்று பிரசுரமாகியுள்ள “முசுப்பாத்தி முத்தர்” என்ற பகுதியில் மிகவும் அழகாக பின்வருமாறு எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது, கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்கள் அண்மையில் இந்தியா வுக்கு விஜயம் செய்தாங்கள் இரசாத்தி. அவங்க அங்கு தங்கட தேவையை முடிச்சுக்கொண்ட பிறகு பிரபல நடிகைகளையும் சந்திச்சாங்க ளாமளடி குஞ்சு. ஒரு சிலர் நடிகைகளின் நேரடித் தரிசனத்தையும் பெற்றுக்கொண்டாங்களாமடி இராசாத்தி. இதுக்குமேல் என்னை ஒண்டும் கேளாதடி பீளிஸ் குஞ்சு..... அட பார்த்தீய(ப)¡
.........”சீதா” ராமா எல்லாம் உனக்கு வெளிச்சம்.......
இது தமிழர்களுடைய பிரச்சினை. தமிழ் மக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு அறிவுறுத் துவதற்கு முன்னர் உங்கள் கட்சியின் ஐக்கியத்தை கட்டியெழுப்புங்கள்.