மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை செய்கை அமோக விளைச்சலைக்கொடுத்துள்ளது. தற்போது மரமுந்திரிகை அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் செய்கையாளர்கள் பெரும் இலாபமீட்டி வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் இம்முறை 500 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாகவும் சீரான காலநிலை காரணமாக சிறந்த விளைச்சல் கிடைத்ததாகவும் மாவட்ட மரமுந்திரிகை கூட்டுத்தாபன அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எஸ்.நரேஸ்குமார் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாகரை, கிரான், வவுணதீவு, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுளில் அதிகமான இடங்களில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளன.
மட்டக்களனப்பு – கல்முனை பிரதான வீதியோரங்களில் மரமுந்திரிகை பழங்கள் விற்பனை செய்யும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் சாதாரண பெண்கள் தினமும் இதனால் வருமானத்தைப் பெற்றுவருகின்றன