5/07/2012

| |

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இல்லை மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவொரு சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறவில்லையென முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்திருப்பதால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக தமிழ் அரசியல் கட்சியொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவில் எந்தவொரு சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறவில்லையெனக் கூறினார்.
கொக்குளாய் மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் ஏற்கனவே சில சிங்களக் குடும்பங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர், புதிதாக எந்தவொரு சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறவில்லையெனத் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத் திலிருந்து இடம்பெயர்ந்து இன்னமும் வவுனியா செட்டிக்குளம் முகாமில் தங்கியிருப்பவர்களை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக அரசாங்கம் மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப் பிடத்தக்கது.