இவ்வாறு முன்னாள் கிராமோதயசபை தலைவரும் செ.இராயதுரையின் ஆதரவாளரும் மட்டு மாநகரசபையின் பிரதி மேஜருமான ஜோஜ்பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
செ.இராயதுரை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்போது கட்சியின் உட்பூசலும் பிரதேசவாதமும் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது. இதன் காரணமாகவே அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சரானார்.
உண்மையான நிலைமை இவ்வாறிருக்க அரசியலில் சரியான பாதையை வகுத்து அதில் பயணிக்கத் தெரியாதவர்கள் அவருக்கு கறுப்புக்கொடி காட்டியது விந்தையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. தமிழ் தேசிய உணர்வு இன்று வடக்கு – கிழக்கில் மேலோங்கியிருப்பதற்கு இராயதுரையின் பங்கு கணிசமானது. பாமர மக்கள் மத்தியில் இவரின் செல்வாக்கு மிகுந்திருப்பது இதற்குச் சான்றாகும். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் இசைநடனக் கல்லூரி அவரின் சேவையை பறைசாற்றி நிற்கின்றது. ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு அருகதையற்ற ஒருவர் கறுப்புக்கொடி காட்டியுள்ளார். இச்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.