5/22/2012

| |

இருதயபுரம் பாலர் பாடசாலை புதிய கட்டிடத் திறப்பு விழா

கட்டிடத்திறப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இக்கட்டிடத்திறப்பு விழாவிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு முதல்வருடன் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இப்புதிய கட்டிடமானது 30 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிதியினை கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது