5/27/2012

| |

தோல்வியில் முடிந்த தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு

tna_bus_attack01.jpgதமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் கட்சியின் தள்ளாடும் தலைவர் சம்பந்தன் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விஷயம் அறிந்த மட்டக்களப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினை அடுத்து மட்டக்களப்பு மக்களின் வருகை கிடைக்காது என்பதனை உணர்ந்த தமிழரசுக் கட்சி சூட்சுமமாக அமெரிக்கன் மிஷன் மண்டபத்திற்கு மாநாட்டினை மாற்றினர்.
வீடு, வீடாகச் சென்று மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தீவிர ஆதரவாளர்கள் கூட மாநாட்டினைப் பகிஷ்கரித்துள்ளனர். யாழ்ப்பானத்தில் இருந்து இரண்டு பஸ்களும், திருகோணமலையில் இருந்து இரண்டு பஸ்களும், அம்பாறையில் இருந்து ஒரு பஸ் அடங்கலாக உணவு பொட்டலங்கள் வழங்குவதாகவும், கௌரவிப்பதாகவும் கூறி அழைத்துவரப்பட்டவர்களை வைத்து, மட்டக்களப்பில் மாநாடு நடத்தியதாக பிரச்சாரம் செய்ய முற்பட்ட தமிழரசுக் கட்சி தோல்வியடைந்துள்ளது.
இது பற்றி கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் மாநாடு இந்த வேளையில் நடத்த வேண்டாம் என தாங்கள் எடுத்துக்கூறிய போதும், ஏற்றுக்காள்ளாமல் யாழ்ப்பாணத்தவர்களை வைத்தாவது மாநாட்டை நடத்துவோம் என்ற மாவை சேனாதிராஜாவின் கூற்று பிழைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மக்களுக்காக தாங்கள் பல வேளைகளில் குரல் கொடுக்க முன்வந்த போதும், மக்கள் உணராமல் தமிழரசுக் கட்சியின் மாநாட்டினை புறக்கணித்தது தமக்கு வேதனையைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களிலும் திருகோணமலையிலிருந்து இரண்டு பஸ்களிலும் ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இம் மாநாட்டை புறக்கணிக்கும்படி பல அமைப்புக்கள் துண்டுப் பிரசுர்கள் போஸ்ரர்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்ததுடன் மட்டக்களப்பின் பல பகுதிகளில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு கறுப்பு கொடி போராட்டம் நடத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது