5/22/2012

| |

கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவைகளையும், அவரின் மக்கள் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மட்டக்களப்புக்கு வந்தபோதுதான் உணர்ந்து கொண்டேன் – தமிழருவி சிவகுமரன்











கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு செய்திருக்கின்ற சேவைகளையும், அவருக்கிருக்கின்ற மக்கள் செல்வாக்கினையும் மட்டக்களப்புக்கு வந்தபோது நேரடியாக உணர்ந்து கொண்டேன் இவ்வாறு தமிழருவி சிவகுமரன் அவர்கள் மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் செவ்வாழை சஞ்சிகை வெளியீடு (18.05.2012) கல்லூரியில் நடைபெற்றபோது சஞ்சிகை விமர்சன உரையினை நிகழ்த்தும் போதே இவ்வாறு கூறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் எங்களுடைய பிரதேசங்களிலே மட்டக்களப்பைப் பற்றியும், கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பற்றியும் தவறாண எண்ணங்கள் இருக்கின்றன. மட்டக்களப்பு மக்கள் மோசமானவர்கள் மந்திரவாதிகள் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள் போனால் திரும்பி வர முடியாமல் வசியம் செய்து விடுவார்கள் என்றெல்லாம் மட்டக்களப்பைப் பற்றி தவறாகப் பேசுவார்கள்.
நான் மட்டக்களப்புக்கு வந்தபோதுதான் உண்மையினை அறிந்தேன். மட்டக்களப்புக்கு வருபவர்கள் பாயோடு ஒட்டி விடமாட்டார்கள் பாயிலே படுத்து விடுவார்கள். அந்தளவிற்கு மட்டக்களப்பு மக்களின் உபசரிப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றது. மட்டக்களப்பு மக்கள் வசியம் செய்வதனால் பாயில் ஒட்டுவதில்லை நம்மவர்கள் மட்டக்களப்பு மக்களின் உபசரிப்பில் மயங்கி பாயில் படுத்துவிடுவார்கள் நம்மவர்கள்.
மறு புறத்திலே கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பற்றி தவறான எண்ணம், அபிப்பிராயம் எங்கள் பிரதேசங்களிலே இருக்கின்றது. அதற்கு காரணம் தவறான விமர்சனங்கள் முதலமைச்சரைப் பற்றி வெளிவருவாதாகும். ஆனாலும் முதலமைச்சர் அவர்கள் நல்ல பல விடயங்களை செய்கின்றார் என்பதனை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். மட்டக்களப்புக்கு வந்தபோதுதான் அவரின் சேவைகளைக் கண்டு வியந்து நிற்கின்றேன். இப்பாடசாலையின் அதிபர் மற்றும் மக்களின் மூலமாக முதலமைச்சர் அவர்களின் சேவைகளை அறிந்தேன். அவர் மட்டக்களப்புக்கு செய்திருக்கின்ற பல அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக பார்க்கின்றபோது சந்தோசப் பட்டேன்.மட்டக்களப்பு மக்கள் முதலமைச்சர் மீது அதிக பற்றும், நம்பிக்கையும் வைத்திருப்பதை உணர்ந்து கொண்டேன். என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், திரவியம், வலயக்கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.