5/22/2012

| |

கிழக்கு மாகாண தமிழ் மொழி தின போட்டியில் மட்டக்களப்பு கல்வி மாவட்டம் முதலாமிடம்

கிழக்கு மாகாண தமிழ் மொழி தின போட்டியில் 158 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு கல்வி மாவட்டம் 1ஆம் இடத்தை பெற்றது. அத்துடன் 136 புள்ளிகளுடன் திருகோணமலை கல்வி மாவட்டம் 2ஆம் இடத்தையும் 130 புள்ளிகளுடன் கல்முனை கல்வி மாவட்டம் 3ஆம் இடத்தையும் பெற்றன.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழி தின போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இன்று திங்கட்கிழமையும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மாகாணத்தின் மூன்று கல்வி மாவட்டங்களை சேர்ந்த 13 கல்வி வலயங்களுக்குட்பட்ட 80 பாடசாலைகளின் போட்டியாளர்கள் பங்குபற்றினர்.
போட்டியில் பங்குபற்றிய 13 வலயங்களுள் 91 புள்ளிகளை பெற்ற திருகோணமலை வலயம் 1ஆம்  இடத்தையும், 87 புள்ளிகளுடன் மட்டக்களப்பு வலயம் 2ஆம் இடத்தையும், 67 புள்ளிகளுடன் கல்முனை வலயம் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
இதேவேளை, மாhகாண மட்ட போட்டியில் பங்குபற்றிய 80 பாடசாலைகளுள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 38 புள்ளிகளுடன் 1ஆம் இடத்தை பெற்றுள்ள அதேவேளை 2ஆம மற்றும் 3ஆம் இடங்களை முறையே கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியும் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர் தர பாடசாலையும் பெற்றுள்ளன.