5/05/2012

| |

இது எப்படியிருக்கு

  
TNA office in Trincoநேற்று
sampanthan-4இன்று





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மே தினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன்- மாவை சேனாதிராசா 
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடகக் குரலினால் நடாத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ். நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மே தின நிகழ்வில் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று இரவிரவாக தொலைபேசிகளை எடுத்து கேட்கிறார்கள். இலங்கையினுடைய தேசியக் கொடி மீது எங்கள் மக்களுக்கு அத்தனை அதிருப்தி் இருக்கின்றது. அந்த நிழ்வின் நிகழ்ச்சியில் இவ்வாறானதொரு நிகழ்ச்சி எமது நிரலில் இருக்கவில்லை. இது ஒரு திணிக்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது. குறித்த சம்பவம் நடந்த போது நான் அந்த மேடையில் இருக்கவில்லை. விடத்தை தெரிந்து கொண்ட போது மிகவும் சங்கடமாக இருந்தது. தமிழ் உணர்வாளர்கள், தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள், தமிழர்களுடைய தேசத்தை கேட்கும் இனத்தை இந்த தேசியக் கொடியை ஒரு காலமும் இப்போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை. தந்தை செல்வா அதை சொல்லித்தந்தார். ஆனபடியால் அதனால் ஏற்பட்ட இந்த உணர்வு என் உள்ளத்தையும் பாதிக்கிறது. இதனால் இந்த நிகழ்வில் நடந்த சம்பவத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோர விரும்புகின்றேன். எங்கள் உணர்வுகளை எப்போதும் சுமந்து நிற்க வேண்டும். இது வரையும் கடைப்பிடித்து வந்த இனத்தின் விடிவு, எங்கள் நிலத்தை நாங்கள் ஆள வேண்டும் என்ற உணர்வு, எங்கள் நிலத்திற்கு போக வேண்டும் என்ற உணர்வு, தாகம் இவற்றை உங்கள் இதயங்களில் இருத்திக் கொண்டு அடங்கிப் போகாமல் அடக்கு முறைகளுக்கு ஆளாகாமல் இதுவரைகாலமும் துணிவுடன் செயற்பட்டது போல தொடர்ந்தும் ஜனாநாயகத்தை விடுவிக்கின்ற சர்வாதிகாரத்திற்கு எதிராக உங்கள் குரலை எழுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசியக்கொடியை முழு விருப்பத்துடன் தான் ஏந்திநின்றேன்- மன்னிப்பு கோர தேவையில்லை- சம்பந்தன்!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. நான் முழவிருப்பத்துடன் தான் தேசியக் கொடியை ஏந்தி நின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லை. மாவையோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எவரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டே சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம்பந்தன் அவர்களின் கையில் திணித்ததாக மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்ததுடன் அதற்காக  மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அதனை மறுக்கும் வகையில் சம்பந்தன் தான் பூரண விருப்பத்துடனேயே சிறிலங்கா தேசியக் கொடியை ஏந்தி நின்றதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்துள்ளார் -எஸ்.ஜெயானந்தமூர்த்தி


சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்துள்ளார் என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட தமிழின துரோகி எவ்வாறு தமிழ் இனத்திற்குத் தலைமை தாங்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பந்தன் ஐயாவிடம் திட்டமிட்டு இலங்கை தேசியக் கொடியை பிடிக்கச் செய்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயல் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நரித்தந்திரமாகும்.- பா.அரியநேத்திரன் 
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவிடம் திட்டமிட்டு இலங்கை தேசியக் கொடியை பிடிக்கச் செய்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயல் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நரித்தந்திரமாகும்.என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தி, அந்த அமைப்பை அழிப்பதற்கு உதவிய ரணில் விக்கிரமசிங்க, இப்போது தமிழர்களின் அரசியல் சக்தியாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்குடனேயே இரா.சம்பந்தன் ஐயாவின் கையில் பலாத்காரமாக சிங்கக்கொடியை கொடுத்து உயர்த்திப்பிடிக்கச் செய்துள்ளார்.
மேற்படி சம்பவம் இலங்கையில் உள்ள எந்த பேரினவாதக் கட்சிகளுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டணி வைக்கக் கூடாது என்பதையே தெளிவுபடுத்தியுள்ளது