மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள கௌரவ ரெவரட் வில்லியம் ஓல்ட் என்பவரின் உருவச்சிலையின் கை மற்றும் அச்சிலையின் கையிலிருந்த விளக்கு என்பன நேற்று (23.5.2012) சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த்த திரச்சபையின் முனாமை குரு கௌரவ எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார்.
இன்று காலை கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மேற்படி உருவச்சிலையின் கை பகுதி மற்றும் அச்சிலையின் கையிலிருந்த விளக்கு என்பன சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டேன்.
இதையடுத்து இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளேன் என கௌரவ எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார்.
1814ம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்த ஐரோப்பிய நாட்டவரான கௌரவ ரெவரட் வில்லியம் ஓல்ட் மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியை உருவாக்கியதுடன் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என கௌரவ டெரன்ஸ் தெரிவித்தார்.
இவரின் நினைவாக 2001ம் ஆண்டு மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக உருவச்சிலை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது