5/22/2012

| |

கிழக்கு மாகாண நியதிச்சட்டம் இயற்றும் மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரேரணை சமர்பிப்பு ! ஜக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பு - மாகாண சபையில் காரசாரமாண விவாதம்



கிழக்கு மாகாண அரச கரும மொழி தமிழ் மொழியாக உள்ளது இந்த நிலையில் மாகாண சபையால் நியதிச் சட்டங்களை தமிழ் மொழியில் உருவாக்குதல் தொடர்பாண தனி நபர் பிரேரணையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று (22.05.2012) சபையில் சமர்பித்தார் அப்போது ஜக்கிய தேசிய கட்சி தமிழ் மொழி நியதிச்சட்டத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியது காரசாரமாண விவாதங்களும் இடபெற்றது இந்த நிலையில் உயிரிளந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மன்சூர் சின்னலெப்பையின் நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக சபை 10.00 மணியுடன் ஒத்திவைக்கப்பட்டது அடுத்த அமர்வில் இப் பிரோணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது போண்ற கிழக்கு முதல்வரின் செயற்பாடுகள் வரவேற்க தக்கதுடன் அதற்கு உறுதுணையாக செய்படுவது கிழக்கு மக்களின் கடமையாகும் கிழக்கு மாகாணத்தில் 80 வீதத்திற்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் வாழ்வது குறிப்பிட தக்கதாகும் இதே வேளையில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று ஜக்கிய தேசிய கட்சி மாகாண சபை உறுப்பினர்களாகவுள்ள சசிதரன், மாசிலாமணி போண்றோர் வாய்மூடி மவுனியா இருப்பது கவலை தரும் விடயமாகும்