நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் வாழைச்சேனை அலுவலகம் இன்று (06.05.2012) திறந்துவைக்கப்பட்டது. மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கொரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இவ்விழாவில் சிறுவர் இல்ல சிறுவர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் அவர்களும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் ரீ.கடம்பன் அவர்களும் நன்னடத்தை திணைக்கள உத்தியோகஸ்தர்கள், சிறுவர் இல்ல முகாமையாளர்கள் சிறுவர் இல்ல சிறார்கள் பலரும் கலந்து கொண்டனர்.