கிழக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த 22.05.2012 அன்று இடம் பெற்றது. கல்வி சுற்றுலாவை மேற்கொண்டு திருகோணமலைக்கு வருகைதந்த மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள் இச்சபை அமர்வினை பார்வையிட்டதோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். இச் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தனும் கலந்து கொண்டிருந்தார்.