5/25/2012

| |

இந்திய உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்புக்கு விஜயம்


 இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோக்கே காந்தா இன்று (25.5.2012) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். இந்திய உயர்ஸ்த்தானிகரின் இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு நகரில் புனரமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலையை பார்வையிட்டு  மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்களை தூவி வணக்கம் செலுத்தினார்.
காந்திசேவா சங்கம், மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடு செய்த இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் கே.சிவசாதன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், காந்திசேவா சங்கத்தின் தலைவர் செல்வேந்திரன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் இந்த மகாத்மா காந்தியின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல் வேறு வைபவங்களிலும் இன்று கலந்து கொண்டார்.