5/09/2012

| |

மண்முணைத்துறை வாவியில் தோணி கவிழ்ந்ததில் ஆரையம்பதியை சேர்ந்த குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்முணைத்துறை வாவியில் தோணி கவிழ்ந்ததில் 28 வயது குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
ஆரையம்பதி செல்வா நகரைச்சேர்ந்த அழகரட்ணம் அற்புதராஜா என்ற நபரே பலியாகியுள்ளார்.
சடலம் கரையொதுங்காத நிலையில் தேடப்பட்டுவருகின்றது. காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.