தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தற்போது வெளியிடும் கருத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கடசிதான் தமிழ் மக்களுக்கான கட்சி என மட்டக்களப்பில் நடந்த தேசிய மாநட்டிலே குறிப்பிட்டிருந்தார் சம்பந்தன்.
இதனை நாங்கள் ஒருபோதும் எற்க மாட்டோம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தமிழ் மக்களுக்கான கட்சிதான். இவ்வாறு இருக்கும் போது திரு சம்பந்தன் அவர்கள் தனது கட்சிதான் தாய் கட்சி எனறு குறிப்பிடுவது ஏற்க முடியாத ஒன்றாகும் என பிபிசிக்கு தெரிவித்தார்சுரேஸ் பிரேமசந்திரன் .
அதனை இரா சம்பந்தன மறுத்திருக்கின்றார். அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பல கட்சிகள் இருந்தாலும் உண்மையில் தமிழ் மக்களுக்கென்று இதய சுத்தியோடு செயற்படும் கட்சி என்றால் அது தமிழரசுக் கடசிதான் என்கின்றார். இப்படி ஆளுக்காள் விவாதித்து கொண்டே செல்கின்றார்கள். தொடர்ந்து இந்த நிலமை தொடருமானால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.