5/05/2012

| |

நாடெங்கும் பசும்பால் கொள்வனவுக்கு ஜனாதிபதி பணிப்பு

பாற்பண்ணையாளர்களை பாதுகாக்க விசேட திட்டம்
முதலில் நுவரெலியா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச பால்
உள்நாட்டு பால் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பசும்பாலையும் கொள்வனவு செய்து பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
உள்நாட்டு பால் பண்ணையா ளர்களை பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நடவடிக்கை எடு த்துள்ளதாகவும் பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று கூறினார்.
இதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பசும் பாலும் மில்கோ நிறுவனத் தினூடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்குத் தேவையான சகல அறிவுறுத்தல்களும் மில்கோ நிறு வனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிரதேச மட்டத்தில் பசும் பால் கொள்வனவு செய்யும் நட வடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம் பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறி னார். இதேவேளை உள்நாட்டு பால் பண்ணையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டு ள்ளது. பால் பண்ணையாளர்களின் உற்பத்திகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதில்லை என்று கூறி பால் பண்ணையாளர்கள் சிலர் தமது உற்பத்திகளை வீதிகளில் கொட்டியது தொடர்பான அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பால் பண்ணையாளர்களின் உற்பத்தி தொடர்பான விவகாரம் குறித்து அமைச்சரவையில் விரிவாக ஆராயப்பட்டது.
அரசாங்கம் பால் பண்ணையாளர்களை ஊக்குவிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளினால் பசும் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனை கொள்வனவு செய்வது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தியது.
பால் பண்ணை அமைப்புகளினூடாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திரட்டப்படும் பாலை மில்கோ நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் பசும்பால் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தலா ஒரு பால் கிண்ணம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பான திறைசேரி நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு சுற்றுநிருபமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டம் வெற்றியளித்ததும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பால் பண்ணையாளர்களை பாதுகாக்கும் வகையில் பால் மா இறக்குமதி வரியை அதிகரிக்க அமைச்சரவை நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
உள்நாட்டு பால் பண்ணையாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதை தனியார் துறை நிறுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையின் பின்னணியில் அரசியல் தலையீடு காணப்படுகிறது. இத்தகைய தலையீடுகளுக்கு அரசாங்கம் தலைசாய்க்காது பல்தேசிய கம்பனிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சக்திகள் இவ்வாறான பிரச்சினைகளின் பின்னணியில் உள்ளன.
நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்ட பின்னரும் நாட்டின் மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்க சில தரப்பினர் முயல்கின்றனர். பால் வீசப்பட்ட சம்பவம் மட்டுமன்றி தம்புள்ள சம்பவத்தின் பின்னணியிலும் இவ்வாறான சக்திகள் உள்ளன.
தம்புள்ள விடயம் ஜெனீவாவிலும் பேசப்பட்டுள்ளது. நாட்டில் அமைதியை பாதுகாப்பது சகலரதும் பொறுப்பாகும். இது சகல மக்களுடைய நாடாகும். எனவே, இவ்வாறான சம்பவங்கள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நாட்டில் அமைதி நிலைமையை குழப்ப இடமளிக்க முடியாது. ஊடகங்களும் இவ்வாறான சம்பவங்களின்போது பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.