மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபராக திருமதி பி.எஜ்.எம்.சாள்ஸ் இன்று புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் வரவேற்பளிக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமயவழிபாடுகளை தொடர்ந்து இவர் தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் பெண் அரசாங்க அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.