5/15/2012

| |

சந்தணமடு ஆற்றில் மண் அகழ்வு தொழிலாளர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைக்கு கிழக்கு முதல்வரின் அயராத முயற்சியால் நிரந்தரத் தீர்வு

சந்தண மடு ஆற்றிலே மண் அகழ்வுத் தொழிலை மேற் கொள்வதன் மூலம் 1500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இவர்கள் மண் அகழ்வதிலே பல கட்டுப்பாடுகளும் தடைகளும் இருந்து வந்தது. இதனை அறிந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் முன்னர் ஒரு தடவை சந்தணமடு ஆற்றிற்கு நேரடியாகச் சென்று மண் அகழ்வுத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தற்காலிகமான தீர்வினையும் பெற்றுக் கொடுத்தார்.
குறித்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் முதலமைச்சரின் எண்ணத்திற்கமைய பல உயர் அதிகாரிளின் கவனத்தி்கு இத்தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை முதலமைச்சர் கொண்டு சென்றதன் பயனாக பல உயர் அதிகாரிகள் இன்று சந்தணமடு ஆற்றுக்கு சென்று நிலமைகளை அவதானித்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொழிலாளர்கள் மண் அகழ முடியும் எனும் நிரந்தரத் தீர்வினையும் வழ்கினர்.
தொடர்ந்து மட்ட்களப்பு கச்சேரியில் இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
சந்தணமடு ஆற்றுக்கு நேரடியாக சென்று நிலமைகளை ஆராய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பூகோள சரிதவியல் பணிப்பாளர் அணில் பீரிஸ், ஏறாவூர் பிரதேசசபை தவிசாளர் வினோத், ஏறாவூர் பிரதேச செயலாளர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற் கூறப்பட்ட அதிகாரிகளுடன் உதவி அரசாங்க அதிபர் மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.