5/22/2012

| |

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் எல்லோரும் சுத்தமானவர்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எத்தனை பேர் துரோகிகள் என்பது எங்களுக்கு தெரியும், தேவை என்றால் நாங்கள் அந்த பட்டியலை வெளியிடுவோம் - யோகேஸ்வரன்

இராஜதுரையை யாழ்ப்பாணத்தில் வைத்து சிவாஜிலிங்கம் துரோகி, சங்கிலியன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். சிவாஜிலிங்கத்திற்கு இராஜதுரையை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. சிவாஜிலிங்கம் சுத்தமானவரா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் எல்லோரும் சுத்தமானவர்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எத்தனை பேர் துரோகிகள் என்பது எங்களுக்கு தெரியும், தேவை என்றால் நாங்கள் அந்த பட்டியலை வெளியிடுவோம் என யோகேஸ்வரன் கடும் தொனியில் தெரிவித்தார்.
சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதாக கூறுகிறார்கள். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தால் சிவாஜிலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மட்டக்களப்பான் துரோகி, சங்கிலியன் என கூறுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறதா அல்லது அவரின் கட்சியான ரெலோ ஏற்றுக்கொள்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
இப்போது யாரும் யாரையும் துரோகி என கூற முடியாது. இராஜதுரையை துரோகி என யாராவது கூறுவார்களானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பலர் துரோகிகள் தான். அவர்களின் பட்டியலை நாங்கள் வெளியிட தயாராக இருக்கிறோம் என யோகேஸ்வரன் தெரிவித்தார்.