குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய “இலங்கை அரசியல் வரலாறு இழப்பு்களும் பதிவுகளும்” எனும் நூல் இன்று (2.05.2012) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந்நூல் ஆய்வுரையினை கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை அரசறிவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.வேலுப்பிள்ளை குணரத்தினம் அவர்கள் வழங்கினார். நூலின் முதல் பிரதியினை நூலாசிரியரி குமாரதுரை அருணாசலம் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களுக் வழங்கி வைத்தார்.
நூலாசிரியருக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாகவும் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன் மற்றும் எ.கிருஸ்னானந்தராஜா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தவிசாளர்கள் தலைவர் பணி்க்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாநகர பிரதி மேஜர் யோர்ஜ் பிள்ளை மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்