5/09/2012

| |

கிழக்கு மாகாண முதலமைச்சர் கரடியனாறு மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம்

மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமாகிய சிவநேசதுரை அவர்கள் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரையும் சந்தித்து பாடசாலையின் நிலைமைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பவற்றை கேட்டறிந்து கொண்டதோடு பாடசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகளை உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.